Posts

அரிகண்டம், தில்லைக்காளி தேர் ஓடியது

Image
பக்கம் 34 - சிதம்பரத்தில் கவீசுவராள் வந்து பாடினது வனத் தீசாருள் தெய்வ மெனுங் கற்பகத்தான் கல்வி தருவார் தமக்கு நீ காப்பூ - உ   தில்லைநாயகி யம்மன் கோவில் பாகை யில் மேலு பழய தரையன் - ஈகை சோ பிள்ளை யில்லை.   ஆகையினால் - சிதம்பரத்தே வந்து சிவகங்கை மூழ்கி - யிதம் பெருபூசை [1] ஏற்றிப் பணிந்து “மைந்தரைத் தாரும்” , மறுபடி வந்து - நந்த, நின் பெயரைச் சாத்துவேன் [2] என்று ப(ங்)குயினில் [3] ஏகப் [4] , பாலன் பிறக்க, யேதிர் இல்லாப் பிராயம் [5] ஈரெட்டாக [6] , சீர் பெரும்புலியூர் தில்லையில் வந்து பெரும் வீரப்பெருமாள் என்று பெயரிட்ட பின்பு ஊருக்குச் செல்லும் நாள் -- தில்லைநாயகிக்கு திருவிழா அல்லவோ எல்லோரும் காப்பில் [7] அகப்பட்டோமே, ஊருக்குப் போக ஒண்ணாது என்று என மிகு தலத்தில் இருக்கு(ம்) நாளில், அடா பெருந்தில்லை அம்மை திருத்தேர் படர்ந்து வரச்சே [8] , பருத்திக் குடையான் கோடியில் ஆ   பக்கம் 35 - தில்லைநாயகி யம்மன் கோவில்             ழி [9] ஓடிப் புதைய, கோத் தரு மிக ப(க்)த்தரும் இழுத்து - கையும் சோர்ந்தார் - மெய்யும் சோர்ந்தார் - என்ன காரணமோ - ஏது காரணமோ - தில்லை நாயகியே சொல்லு நீ யம்மா